பேஸ்புக்கில் கொடுக்கும் ‘லைக்ஸ்‘ அடிப்படையில் குணாதிசயங்களை போட்டுடைக்கும் புதிய மென்பொருள்!!

309

FB-LikeButtonஇன்றைய உலகில் இளைஞர்களின் ‘இணைய நண்பன்’ என்று கூறுமளவுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் வாழ்க்கையோடு ஒன்றித்துள்ளது. எவரை எந்த நேரத்தில் பார்த்தாலும் பேஸ்புக்குடன் தான் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் ஒருவரின் செயற்பாடுகளை வைத்து அவருடைய குணாதிசயங்களை கூறும் மென்பொருள் ஒன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

Apply Magic Sauce (link is external) என்ற பெயருடைய இந்த மென்பொருளுக்குள் பேஸ்புக் முகவரியோடு நுழையும் போது நபர் ஒருவரின் அனைத்து விதமான குணாதிசயங்களையும் குறித்த மென்பொருள் முன்வைக்கின்றது.

அதாவது நபர் ஒருவர் பேஸ்புக்கில் அவர் கொடுத்திருக்கும் ‘லைக்ஸ்‘ அடிப்படையில் அவரின் குணாதிசயங்களை நிர்ணயிக்கிறது.

நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் நம் மனதை பாதிக்கும் விடயங்களுக்கு தான் நாம் விருப்பம் தெரிவிக்கிறோம். நமக்கு பிடிக்காத விஷயங்களை கடந்து போய்விடுகிறோம்.

அப்படி நமக்கு பிடித்தவற்றுக்கு நாம் கொடுத்த லைக்குகளை வைத்து நம்மைப் பற்றி இந்த மென்பொருள் விபரிக்கின்றது.

இந்த மென்பொருளில் முதலில் வயது கூறப்படுகின்றது. வயது என்றால் தாம் பேஸ்புக்கில் கொடுத்து இருக்கும் லைக்குகளை வைத்து மனதின் வயதை கணக்கிடுகிறது. நீங்கள் மன அளவில் இளைஞராக இருக்கிறீர்களா? என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து பாலியல். நீங்கள் ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம். ஆனால் மனதில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்றும் அதன் சதவீதம் எவ்வளவு என்றும் சொல்லி விடுகிறது. அடுத்ததாக நமது ஆளுமைத் திறன்.

இதற்காக 2 லட்சத்து 60 ஆயிரம் பேரிடம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதற்கடுத்து உங்களின் புத்திசாலித்தனத்தை சொல்கிறார்கள். அதன்பின் உங்கள் வாழ்க்கை உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? அதன் சதவீதம் எவ்வளவு என்று சொல்லி இருக்கிறார்கள்.

நாம் லைக் செய்தவர்களில் எத்தனை பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதையும் இந்த மென்பொருள் சொல்கிறது. பொதுவாக ஆண்களில் 100 பேரை எடுத்துக் கொண்டால் அதில் 7 பேர் ஓரின சேர்க்கை என்றும், பெண்களில் 100 பேரை எடுத்துக் கொண்டால் அதில் 5 பேர் ஓரின சேர்க்கையான இருப்பார்கள் என்றும் கூறுகிறது. உங்கள் லைகுகளில் எத்தனைப் பேர் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

அதன்பின் அரசியல் மற்றும் மதம் சார்ந்த விடயங்களில் நாம் எப்படி? கல்வி மற்றும் உறவுநிலைகளில் நமது மனம் எப்படி இருக்கிறது என்ற எல்லா விபரங்களையும் விளக்கமாக சொல்கிறார்கள். இதுதான் அந்த மென்பொருள் முகவரி http://applymagicsauce.com/test.html