
நோயாளி எப்போது மரணமடைவார் என் பதை 96 சதவீதம் துல்லியமாக கூறும் நவீன சூப்பர் கணினியொன்றை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
பெத் இஸ்ரேல் டீகொனஸ் மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி ஸ்டீவன் ஹோர்ங் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த சூப்பர் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் உடல் நிலையைக் கண்காணிக்கும் கருவிகளை இந்த சூப்பர் கணினியுடன் இணைத்த போது, அந்தக் கணினி மருத்துவர்களை விடவும் சிறப்பாக நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை இனங்கண்டறிந்ததாக ஸ்டீவன் ஹோர்ங் தெரிவித்தார்.
மேற்படி சூப்பர் கணினி மருத்துவ கண்காணிப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி நோயாளிகளின் உடலிலுள்ள ஒட்சிசன் மட்டம் மற்றும் குருதி அமுக்கம் உள்ளடங்கலாக அனைத்தையும் அளவீடு செய்கின்றது. மேலும் இந்த முறைமையானது நோயாளியின் உடல் நலம் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் சேகரிக்கிறது.
அந்தக் கணினியில் கடந்த 30 வருடங்களிலான 250,000க்கு மேற்பட்டவர்களின் உடல் நலம் தொடர்பான விபரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்களின் அடிப்படையில் புதிதாகப் பெறப்பட்ட நோயாளிகளின் உடல் நலம் தொடர்பான தகவல்களைப் பகுப்பாய்வு செய்தே அந்த நோயாளி எப்போது மரணமடைவார் என்பதை அந்தக் கணினி கணித்துக் கூறுவதாக வும் அவர் கூறினார்.
“நீங்கள் இறக்கப் போகிறீர்கள்” என ஒரு நோயாளிக்கு அந்தக் கணினி எதிர்வு கூறுமானால், அவர் அடுத்து வரும் 30 நாட் களுக்குள் இறக்கப் போகிறார் என கருத முடியும் என்று ஸ்டீவன் ஹோர்ங் தெரி வித்தார்.





