ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார்.ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவர் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்தின்போது இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் அவருடன் கலந்துரையாடப்படும். அது மட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. அந்த அமைப் புக்கள் இங்கு வந்து நிலைமையை பார்க் கலாம் என்றார்.





