இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கடவத்தையிலிருந்து கடுவலை வரையான அதிவேகப் பாதையில் கடவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிறிய ரக வாகனங்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி புதிய கட்டண முறை இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் என்று அதிவேக வீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடவத்தையிலிருந்து கடுவலை வரையான அதிவேகப் பாதை இன்று பிற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டண முறை வருமாறு
கடவத்தையிலிருந்து கடுவலை வரை 100 ரூபா
கடவத்தையிலிருந்து காலி வரை 500 ரூபா
கடவத்தையிலிருந்து மாத்தறை வரை 650 ரூபா





