கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
எனவே இது தொடர்பான ஒப்பந்தத்தை மேலும் 06 மாதத்துக்கு அதிகரிக்க துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் பெருநகர அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதனால் சீன முதலீட்டில் தொடங்கப்பட்ட துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்





