
ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 66 வயது நபர் ஒருவர் வெண்பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலின் எழிலை ரசித்து, வியந்தபடி படிக்கட்டுகளில் இறங்கி வந்துகொண்டிருந்த ஹுவேடா என்ற ஜப்பான் நாட்டவரும் அவரின் நண்பரும் கால் தவறி விழுந்துள்ளார்.
இதனால் ஹுவேடாவின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரது நண்பருக்கு கால் எலும்பு முறிந்தது. காயமடைந்த இருவரையும் உடனடியாக அருகாமையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஹுவேடாவின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்த டாக்டர்கள் அவரது நண்பருக்கு மட்டும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஜப்பான் நாட்டு தலைமை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள பொலிசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.





