பாரிஸ் நகரில் மதக் கூட்­டத்தில் அரை நிர்­வாண கோலத்தில் தோன்றி இரு பெண்கள் ஆர்ப்­பாட்டம்!!

348

interstingபிரான்ஸின் பாரிஸ் நகரின் மேற்­கே­யுள்ள பொன்­டொ­யிஸில் இடம்­பெற்ற இஸ்­லா­மிய கூட்­ட­மொன்றின் போது, இரு பெண் ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் மேலா­டை­யின்றி அரை நிர்­வாணக் கோலத்தில் மேடை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்பட்­டது.

பெயர் வெளி­யி­டப்­ப­டாத மேற்­படி 25 வயது மற்றும் 31 வய­து­டைய பெண்கள் மதக் கூட்டம் நடை­பெற்ற மண்­ட­பத்­துக்குள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து அங்­கி­ருந்த மேடையில் கூச்­ச­லிட்­ட­வாறு தாவி ஏறி­யுள்­ளனர்.

தொடர்ந்து அங்­கி­ருந்த நுணுக்­குப்­பன்னி உப­க­ர­ணங்­களை தமது கைகளில் எடுத்த அவர்கள், தம்மை எதிர்­கொண்ட இரு ஆண்­களை தமது கை முஷ்­டி­களால் தாக்க முயற்­சித்­துள்­ளனர்.

அந்த இரு­வரும் ‘எவரும் என்னை கைய­ளிக்­கச்­செய்ய முடி­யாது’ என பொருள்­படும் வாச­கத்தை தமது வெற்று உடலில் கறுப்பு நிற மையால் எழு­தி­யி­ருந்­தனர்.இந்­நி­லையில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரால் அந்தப் பெண்­களில் ஒருவர் முதலில் அங்­கி­ருந்து இழுத்துச் செல்­லப்­பட்டார்.

அதற்கு சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த மேலும் பல பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் இரண்­டா­வது பெண்ணை பெரும் போராட்­டத்தின் மத்­தியில் அங்­கி­ருந்து வெளி­யேற்­றினர். அந்தப் பெண்கள் இருவரும் பெண்கள் உரிமை செயற்பாட்டுக் குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.