பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு கிடைத்த தக்க தண்டனை!!

670

Abuse

கொட்டாவை முதல் மொரகஹேன நோக்கி பயணிக்கும் பஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் , அவரின் கழுத்தில் துஷ்பிரயோகக்காரர் என எழுதிய அட்டையையும் மாட்டி கம்பமொன்றிலும் பொலிஸ் வரும் வரை கட்டிவைத்துள்ளனர்.

பதின்மூன்று வயதான மாணவியொருவரையே குறித்த நபர் படம்பிடித்துள்ளார். இவர்படம் பிடிப்பதை மாணவர்கள் இருவரே கண்டுள்ளனர்.