3 இலட்சம் பவுண்ஸை திரட்டியது ஜாம்பவான்களின் போட்டி!!

433

cricket-for-heroes

போரில் காயமடைந்த இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் சுமார் 3 இலட்சம் பவுண்ஸ் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு -20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் ஹெல்ப் போ ஹீரோஸ் லெவன் ( Help For Heroes) மற்றும் உலக லெவன் (Rest Of World XI ) அணிகள் மோதின.

இப் போட்டியில் டோனியின் அதிரடியால் ஹெல்ப் போ ஹீரோஸ் லெவன் அணி 4 விக்கெட்டுகளால் அதிரடி வெற்றி பெற்றது.

இக் காட்சிப் போட்டியில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஷேவாக், டோனி, பிரண்டன் மெக்கலம், மெத்யூ ஹைடன், கிரேம் ஸ்மித், ஜெயவர்தன, பிரையன் லாரா ஆகிய முக்கிய வீரர்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.