தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் முதல்போட்டியில் இலங்கை – நேபாளம் மோதல்!!

247

football-team_0

தெற்­கா­சிய கால்­பந்து சம்­மே­ளன சம்­பி­யன்ஷிப் கிண்­ணத்­திற்­கான (எஸ்.ஏ.எப்.எப்.) கால்­பந்து தொடர் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் இந்த ஆண்­டுக்­கான எஸ்.ஏ.எப்.எப். தொடர் கேர­ளாவின் திரு­வ­னந்­த­பு­ரத்தில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்­பித்து ஜன­வரி 3-ஆம் திகதி வரை நடை­பெற உள்­ளது.

இதில் தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் உள்ள இலங்கை, ஆப்­கா­னிஸ்தான், பங்­க­ளாதேஷ், பூட்டான், இந்­தியா, மாலை­தீ­வுகள், நேபாளம், பாகிஸ்­தான் ஆகிய 8 நாடுகளின் அணிகள் பங்­கேற்­கின்­றன. இவை இரண்டு பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் சுற்றில் மோது­கின்­றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்­வொரு பிரி­விலும் முதல் இரண்டு இடங்­களைப் பெறும் அணிகள் அரை­யி­று­திக்கு தகுதி பெறும்.

இப்­போட்­டி­க­ளுக்­கான அட்­டவணை நேற்று வெளி­யி­டப்­பட்டது. அதன்­படி, இத்­தொ­டரின் முதல் ஆட்­டத்தில் நேபா­ளம்–-­இ­லங்கை அணிகள் விளை­யா­டு­கின்­றன. அதன்­பின்னர், ஏ பிரிவில் உள்ள இந்­திய அணி தனது முதல் ஆட்­டத்தில் பாகிஸ்­தா­னுடன் மோத உள்­ளது. இப்­போட்டி 23ஆம் திகதி நடக்­கி­றது.

நடப்பு சம்­பி­ய­னான ஆப்­கா­னிஸ்தான் பி பிரிவில் இடம்பெற்­றுள்­ளது. இந்த அணி கடந்த முறை இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.