செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய 3D வீடுகள்!!

453

2749136943D-Houseவிண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தங்குமிடம் அமைக்கப்படவுள்ளது.மனிதனின் மண்டை ஓடு முதல் பீட்சா தயாரிப்பது வரை பல்வேறு சாதனைகளை 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் நிகழ்த்தி வரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களுக்காக தங்குமிடம் ஒன்றை செவ்வாய் கிரகத்தில் நாசா அமைக்கவுள்ளது.

மனிதன் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் செவ்வாய் கிரகத்தில் மட்டுமே காணப்படுகின்றன.இதனால் அந்த கிரகம் குறித்து அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்ய விண்வெளி நிறுவனம் ஆகியவை தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்போது பிரான்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்காக அதிநவீன வீட்டின் மாதிரியை தயாரித்துள்ளது.செவ்வாயில் மனிதன் குடியேறுவதற்கு ஏற்ற வீடுகளை 3டி வடிவில் உருவாக்கும் போட்டியை நாசா அண்மையில் நடத்தியது.

இதில் மிகச் சிறந்த 30 மாதிரிகளை நாசா தேர்வு செய்தது.இதனிடையே பிரான்ஸை சேர்ந்த பேபுலஸ் என்ற நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கு ஏற்ற வகையில் அதிநவீன வீட்டின் 3டி மாதிரியை வெளியிட்டுள்ளது.

கூடு போன்று தோற்றம் கொண்ட இந்த தங்குமிடத்தில் மொத்தம் 3 தளங்கள் இருக்கும்.3-வது தளம் வெறும் 3 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது. 2-வது தளம் 29 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும். இதில் பணியிடமும் கழிவறைகளும் இருக்கும்.கீழ்த்தளம் 40 சதுர மீட்டர் அளவு இருக்கும். இதில் விண்வெளி வீரர்களுக்கான தங்கும் அறைகள் இருக்கும்.