கால்­வா­யி­லி­ருந்து இரண்டாம் உலகப் போர் கால வெடிக்­காத குண்டை மீட்ட 8 வயதுச் சிறுவன்!!

305

bombsகால்­வா­யொன்­றி­லான படகுப் பய­ணத்தின் போது சக்தி வாய்ந்த காந்தம் பொருத்­தப்­பட்ட கரு­வி­யொன்றைப் பயன்­ப­டுத்தி கால்வாய் நீரில் மூழ்­கி­யுள்ள உலோகப் பொருட்­களை எடுக்கும் நட­வ­டிக்­கையில் பொழு­து­போக்­காக ஈடு­பட்ட 8 வயது சிறுவன் ஒரு­வனால் வெடிக்­காத நிலை­யி­லி­ருந்த இரண்டாம் உலகப் போர் காலக் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

நொட்டிங்ஹில் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பிரான்டோ சுமித் என்ற மேற்­படி சிறுவன், தனது இரட்டைச் சகோ­த­ர­னான ஜாகொப்­பு­டனும் நண்­ப­னான நூரு­டனும் தமது பரா­ம­ரிப்­பா­ள­ரான ஜேம்ஸ் போல்­டனின் படகில் லண்டன் கிரான்ட் யூனியன் கால்­வாயில் பய­ணித்த வேளை­யி­லேயே இந்தக் குண்டைக் கண்­டு­பி­டித்­துள்ளான்.

சிறு­வனால் கால்­வா­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட அந்தப் பொருள் ஒரு குண்டு என்­பதை அறிந்த ஜேம்ஸ் போல்டன், உட­ன­டி­யாக படகை கரைக்குச் செலுத்தி வந்து அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.

பொலிஸார் வந்து அந்தக் குண்டைப் பரி­சோ­தித்த போதே அது இரண்டாம் உலகப் போர் காலக் குண்டு என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.தொடர்ந்து அந்தக் குண்டு செயலிழக்க வைப்பதற்காக குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரால் கொண்டு செல்லப்பட்டது.