இந்தியாவில் மீண்டும் ஓடும் பஸ்ஸில் பெண் பலாத்காரம்!!

999

16332744660xnfdj67

டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த 23 வயது துணை மருத்துவ மாணவியை 6 பேர் கும்பல் ஓடும்பஸ்சில் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த மாணவி பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவத்தை யாரும் இன்னும் மறக்கவில்லை.

இந்தநிலையில் இதேபோல் மத்திய பிரதேசம் போபாலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போப்பால் சோலா பகுதியில் இருந்து ஒரு பெண் இரவு 11 மணிக்கு மினி பஸ்ஸில் ஏறி உள்ளார். பஸ்ஸில் வேறு யாரும் இருக்காத நிலையில் அந்த பெண் இறங்க வேண்டிய இடத்தில் பஸ்ஸை நிறுத்தாமல் டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு ஓடும் பஸ்சிலேயே அந்த பெண் 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.