கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு!!

643

118487070815289899drawn2கொஸ்கொட மஹபெலேன கடற்பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று காலை 8.30 மணியளவில் குறித்த குழந்தையின் சடலம் கரையொதுங்கி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கொட மஹபெலேன பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து சென்று கடலில் தள்ளி விட்ட சம்பவம் கடந்த வியழக்கிழமை இரவு இடம்பெற்றிருந்தது.பின்னர் அவரது மனைவி கரைக்கு நீந்தி வந்து உயிரை காப்பாற்றி கொண்ட நிலையில் குழந்தையின் சடலத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே குழந்தையின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.