
இன்று சர்வதேச அமைதி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21 ஆம் திகதி சர்வதேச அமைதி தினமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
ஆரம்பத்தில் செம்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்கிழமை இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21 ஆம் திகதி சர்வதேச அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் ஏற்பட்ட கசப்பான மற்றும் சமாதானமற்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட பாரிய உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களினால் சர்வதேச சமாதான தினத்தை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டது.
அதன் விளைவாக இன்று போன்றதொரு நாளில் இன்று சர்வதேச அமைதி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலக சமாதான முயற்சியின் போது ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹமர்சீல்ட் 1961 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தமை வரலாற்று சுவடாக பதிவாகியுள்ளது.
மனித உள்ளங்களினால் தான் போர் எண்ணம் உருவாக்கப்படுவதால் மனித உள்ளத்தாலே அமைதிக்கான அரண்களும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே யுனேஸ்கோவின் வாசகமாக அமைந்துள்ளது.
இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடனன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் இன்று மட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா.





