வவுனியா புளியங்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)

619

வவுனியா புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (21.09.2015) காலை 11 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வண்டிக்கு பின்னால் சென்ற வான் டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் வண்டி மீது வான் மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த வான், டிப்பர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் வண்டியின் சாரதி புளியங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-சம்பவ இடத்திலிருந்து பாஸ்கரன் கதீஷன்-

11998089_407409156119072_1361242541_n  12016567_407409299452391_1295753977_n 12016667_407409139452407_1469062267_n 12016696_407409502785704_1381502314_n 12033457_407409166119071_138666425_n 12041747_407409452785709_1263263428_n 12042239_407409426119045_1140737595_n 12047772_407409072785747_1161178336_n 12048821_407409182785736_911526212_n 12053318_407409126119075_581934534_n11998169_407409459452375_2113819912_n