50 வருட காலமாக தான் நேசித்த பெண்ணிடம் அவரைத் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை தெரிவிக்காது மனதில் வைத்திருந்த நபரொருவர், தான் மரணப்படுக்கையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த வேளை தனது அந்த விருப்பத்தை வெளியிட்டு மருத்துவமனையில் வைத்து திருமணம் பந்தத்தில் இணைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
ஆர்தர் ஹொலண்ட் (69 வயது) என்பவரே தனது மனம் கவர்ந்த பெண்ணான வல்லை (64 வயது) இவ்வாறு மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
வல் 15 வயது பாடசாலைச் சிறுமியாக இருந்த போது அவரை ஆர்தர் முதன்முதலாக சந்தித்திருந்தார். இந்நிலையில் மனம் கவர்ந்த அவரிடம் தயக்கம் காரணமாக தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தைத் தெரிவிக்காது அவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் பிரிந்த அவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்தனர். இதன் போது அவர்கள் இருவரது மனதிலும் ஒருவர் மீது ஒருவர் காதல் துளிர்விட்ட போதும், அவர்கள் தமது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிடாது இருந்துள்ளனர்.
கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் ஆர்தருக்கு உயிராபத்தான வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் அவர் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வல்லிடம் வெளியிட்டார்.
வல் மகிழ்ச்சியுடன் தனது காதலை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் திருமணம் நடைபெற்றது.






