
வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு ஒருவர் செட்டிகுளம் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.09) வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் உள்ள ரங்காத்கம ரஜகம விகாரைக்கு சென்ற சிறுவன் 10 வயது சிறுவன் ஒருவனை அவ் விகாரை மதகுரு துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தாக குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா, செட்டிகுளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, குறித்த விகாரையின் விகாராதிபதி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, பாதிப்படைந்த சிறுவன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





