உலகம் முழுவதும் தடைபட்ட ஸ்கைப் சேவையால் சிரமங்களை எதிர்நோக்கிய பல கோடி வாடிக்கையாளர்கள்!!

288

Skype

இணையத்தளம் ஊடாக தொலைபேசி வசதிகளை வழங்கி வரும் ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஸ்கைப் சேவை செயலிழந்தது குறித்து முதன் முதலில் சமூக வலைத்தளங்களில் தான் செய்திகள் பரவின. பல வாடிக்கையாளர்களும் தங்களது தொடர்பில் இருப்பவர்களிடம் தகவல் பரிமாற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனிடையே அந்த நிறுவனம் வீடியோ சேவை மட்டுமே தடைபட்டுள்ளதாகவும் எஞ்சிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்த ஸ்கைப் சேவை இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு செயலிழந்தது. அது தொடர்ந்து 2 நாட்கள் வரை நீடித்தது.

இரண்டாவது முறையாக கடந்த 2010-ம் ஆண்டு மீண்டும் செயலிழந்தது, அது ஒரு நாள் முழுவதுமாக நீடித்தது, இதனால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.

ஸ்கைப் சேவையை கடந்த 2011-ம் ஆண்டு Microsoft நிறுவனம் பெரும் தொகை தந்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.