வவுனியா பெரியார்குளத்தில் வீதி அமைப்பதை தடுத்து நிறுத்திய நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள்!!(படங்கள்)

473

வவுனியா பூந்தோட்டம்- பெரியார்குளம் பகுதியில் குளத்தை அண்மித்த பகுதியில் வீதி அமைப்பதை நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள் இன்று (22.09.2015) தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பதற்றம் நிலவியது.

வீதி அமைக்கப்படும் பகுதி நீர்ப்பாசணத் திணைக்களத்திற்கு சொந்தமானது எனத் தெரிவித்தே அதிகாரிகள் வீதி அமைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் எனினும் அவ் வீதி அமைக்கப்படுவது தமக்கு அத்தியாவசியமானது எனவும் தெரிவிக்கும் பிரதேசவாசிகள், தொடர்ந்து வீதி அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 12025495_499686773539416_1653254461_n 12033275_499689000205860_1055291269_n 12053145_499686776872749_90075279_n 12048608_499688996872527_668333240_n 12047386_499686770206083_894291243_n 12047242_499689003539193_524682979_n 12041849_499686780206082_401019812_n