வவுனியாவில் குடும்பஸ்தரைத் தாக்கியவர் கைது!!

522

Arrest1

வவுனியா நேரியகுளம் பரணதொடுவாய் பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனைவி அருகில் இருக்கும் வீட்டுக்கு கைமாற்றாக சமையலுக்காக அரிசி கொடுத்திருந்த நிலையில் அவரின் கணவன் மது போதையில் வந்து அரிசியைப் பெற்றுக் கொண்ட வீட்டு குடும்பத்தலைவருடன் முரண்பட்டுள்ளார்.

இவ் முரண்பாடு முற்றி குறித்த நபர் அயல் வீட்டு குடும்பஸ்தரான தங்கராசா தேவநாயகம் (வயது 45) என்பவரை போத்தலால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் போத்தலால் தாக்கிய நபர் வவுனியா செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.