வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி சிங்கள ஆசிரியர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது!!(படங்கள்)

506

வவுனியாவில் சிங்கள மொழி மூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் நேற்று (22.09) ஈடுபட்டனர். இரண்டாவது நாளான இன்றும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது.

வவுனியா தெற்கு மற்றும் வெலிஓயா கல்வி வலயங்களில் சிங்கள பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சிங்கள மொழிமூல ஆசிரியர்களே தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 பேர் வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தம்மை ஆசிரியர் சேவை 3.2 இல் உள்வாங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர்கள் தர்மபால செனவிரட்ன, ஜீ.ரி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோர் கலந்துரையாடினார்கள்

20150923_105723 20150923_105729 20150923_105902 20150923_110211 20150923_110234 20150923_110239