மலேசிய பிரதமரை அமெரிக்கா விசாரணை செய்கின்றது!!

295

malaysia

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீதான சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களை அமெரிக்க நீதித்துறையின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்துகிறது.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது உள்நாட்டில் பெருமளவு ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவிலும் நஜிப் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை விசாரிக்க அமெரிக்க நீதித்துறையின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் 681 மில்லியன் டாலர் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.