குடும்பம் நடத்த மறுத்த சிறுமி மீதி துப்பாக்கிச் சூடு!!

516

Sirumi

சட்டத்துக்கு முரணான வகையில் 17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞன் குறித்த சிறுமி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சிறுமி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

21 ஆம் திகதி திங்கட்கிழமை லுணுகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.

மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபர் பதினேழு வயது நிரம்பிய யுவதியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த யுவதி தனது எதிர்காலம் வீணாவதை உணர்ந்த நிலையில் இளைஞனிடம் இருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போதே குறித்த இளைஞன் யுவதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இளைஞனிடம் இருந்த துப்பாக்கி சட்ட விரோதமானதென்று விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத திருமணம் அனுமதிப் பத்திரமில்லாத துப்பாக்கி வைத்திருந்தமை துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.