வவுனியா தோணிக்கல் லக்சபான வீதி புணரமைப்புப் பணிகள் தாமதமாவதாக பிரதேச மக்கள் முறைப்பாடு!!(படங்கள்)

645

வவுனியா லக்சபான வீதி தோணிக்கல் பிரதேசத்தில் நாகதம்பிரான் கோவில்வீதி புணரமைப்புப் பணிகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரால் கடந்த மூன்று மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தற்போது இலங்கை மின்சார சபையினரின் மெத்தனப் போக்கால் இடைநடுவே கைவிடப்படும் நிலை தோன்றியுள்ளதாக அப்பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச சபையினர் புணரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினர் வீதிகளிலிருக்கும் மின்சார கம்பத்தினை எடுத்து வீதியின் உரிய இடத்தில் நாட்டித்தருமாறு தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கடிதம் மூலம் கடந்த மூன்று மாதத்திற்கு முன் தெரியப்படுத்தியிருந்தனர்.

எனினும் அவ் வீதியிலுள்ள தொலைத் தொடர்புக் கம்பங்கள் வீதியிலிருந்து வெளியே நாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் மின்சார சபையினர் தமது நடவடிக்கையினை தாமதப்படுத்துவதாக இவ் வீதியினைப் பயன்படுத்தும் 30 குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

20150923_112658 20150923_112703 20150923_112708 20150923_112738 20150923_112742 20150923_112746 20150923_112749 20150923_113001 20150923_113005 20150923_113012 20150923_113015 20150923_113024 20150923_113030 20150923_113156 20150923_113234 20150923_113243 20150923_113245