35 கிலோ கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது!!

1346

1 (8)தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பிரதேசத்தில் வைத்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் வளான கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய பிரதேசத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்து வந்து மீண்டும் கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லும் போதே இந்தப் போதைப்பொருளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இராணுவ அடையாள அட்டை ஒன்றை வைத்திருந்த குறித்த நபர் மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபா குத்தகை செலுத்த வேண்டிய அடிப்படையில் ஹைபிரைட் கார் ஒன்றை கொள்வனவு செய்து அதன் ஊடாகவே போதைப்பொருள் கடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்தள்ளது.

மேலும் மீட்கப்பட்ட கஞ்சாவின் சந்தைப் பெறுமதி 7 இலட்சம் ரூபா எனத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2012ம் ஆண்டு பணி இடைநிறுத்தப்பட்ட இராணுவ மேஜர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.