அறிக்கையின் மூலம் அழுத்தம் குறைந்தது – பிரதமர்!!

552

1 (28)அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரணை வழங்க தயார் என பிரமதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையில் மூலம் இலங்கை தொடபில் இதுவரை காலம் இருந்து வந்த அழுத்தம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதுபோல் இந்த யோசனையின் மூலம், இலங்கைக்கு எதிர்காலம் தொடர்பிலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.