இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 200 வீடுகளுக்கு சேதம்!!

500

1111379024Indonesiaஇந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதன்போது ஏற்பட்ட அதிர்வினால் கட்டடங்கள் பல குலுங்கியதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்தனர்.

நில நடுக்கம் காரணமாக 60 பேர் காயமடைந்துள்ளதுடன் 200 வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தோனேஷியாவின் வட மேற்கில் உள்ள சோரங் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில், 64 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.