ஸ்டாலினின் பேஸ்புக் பக்கத்தை கண்காணிக்கும் ஜெயலலிதா!!

547

Mkspictureஎன்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து பார்த்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவுகள் அவருடைய கருத்துதானா? என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா சட்டசபையில் அறிவிக்கும் அறிவிப்புகளை எல்லாம், அவராகவே எழுதி கொண்டு வந்தாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. சட்டமன்ற தி.மு.க. குழு தலைவர் மு.க.ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அவை உண்மையிலேயே அவரது கருத்துகள்தானா? என்பதை அவர் விளக்கவேண்டும். ஏனென்றால், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது மு.க.ஸ்டாலின் தனது முகநூல் மூலம் வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், தி.மு.க.வின் தலைமைக்கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

அந்த இணையதளத்தை பராமரிக்கும் சில தோழர்கள் அந்த வாழ்த்தை வெளியிட்டார்கள் என்றும், அந்த வாழ்த்துச் செய்தி மு.க.ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே, தற்போதும் சட்டம்-ஒழுங்கு பற்றி மு.க.ஸ்டாலினின் முகநூலில் வெளிவந்துள்ள பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துதானோ, என்னவோ?” என்றார் ஜெயலலிதா .