டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் தீவிர இரசிகர் ஒருவர், 11 ஆண்டுகள் கோமாவிலிருந்து விழித்தபோது, பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
ஸ்பெயின் செவில்லி நகரத்தை சேர்ந்தவர் ஜீசஸ் அப்ரிசியோ. 2004-ம் ஆண்டு தனது 18-வது வயதில் ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 27-ம் திகதி திடீரென கோமாவிலிருந்து அவருக்கு சுயநினைவு திரும்பியது.
டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் தீவிர இரசிகர் என்பதால் அவரைப்பற்றி கேட்டுள்ளார். அவரது குடும்பத்தினரும், பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதையும், தற்போதும் விளையாடிவரும் அவர், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பதையும் கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட ஜீசஸ் அப்ரிசியோ அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் கோமா நிலையில் இருந்தபோது பெடரர் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மட்டுமே வென்றிருந்தார். பெடரர் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார் என நினைத்த ஜீசஸ் அப்ரிசியோக்கு இந்த செய்தி நம்பமுடியாததாக இருந்துள்ளது.
மேலும் அவர் பெடரர் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





