விக்ரம் தற்போதெல்லாம் மிக கவனமாக தன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐ படத்தின் வெற்றி விக்ரம் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.இந்நிலையில் மீண்டும் தவறான கதை தேர்வு இருக்க கூடாது என்பதில் மிக உஷாராக உள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் விரைவில் வெளிவரும் படம் பத்து எண்றதுக்குள்ள.இப்படத்தை தொடர்ந்து ‘அரிமாநம்பி’ இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு மீண்டும் விஜய் மில்டன் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளாராம். ஏனெனில் அந்த அளவிற்கு அவரின் பணியாற்றும் முறை விக்ரமிற்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.




