காலம் கடந்து இப்படியும் சில்கிற்கு ரசிகர்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

219

51702,xcitefun-b6de77b622f5db91d32e5cddf8ff29தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை என்றால் நம் அனைவரது நினைவிற்கும் வருபவர் சில்க் ஸ்மிதா தான். அவர் மறைந்து 19 ஆண்டுகள் ஆனாலும் கூட அவரை நினைவு கொள்ளும் பொருட்டு பல இடங்களில் அவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எளுரு என்ற கிராமத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

பின்பு சென்னையில் உள்ள தன் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார்.விஜயலட்சுமியை பார்த்த நடிகர் வினுசக்கரவர்த்தி அவரது வண்டிசக்கரம் படத்தில் அறிமுகம் செய்து சினிமாவிற்காக “சில்க் ஸ்மிதா” என பெயர் மாற்றினார்.இவர் தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். தன்னால் கவர்ச்சி ஆட்டம் மட்டுமில்லாமல் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்த முடியும் என நிரூபித்துக் காட்டியவர். நடனத்தில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தவர்கள் மத்தியில் இவர் மட்டும் தனித்து வெளிப்பட்டவர். குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் சிறந்த குணச்சித்திர நடிகை என பெயர் எடுத்தவர்.மேலும் அன்று பெய்த மழை, பாயும் புலி, கோழிகூவுது, அவசர போலிஸ், மூன்றாம் பிறை, மூன்று முகம் போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளது.குறிப்பாக 1980களில் இவர் இல்லாத படங்களே இல்லை என சொன்னால் கூட மிகையாகாது.

இன்று நடிகைகளுக்கு தான் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். ஆனால் 1980களில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட் கிடைப்பதற்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலர் காத்திருந்தது உண்டு.சினிமாவில் தனக்கென ஒரு பெயரை பதிவு செய்து கொண்டு புகழின் உச்சத்தை அடைந்தார். ஒரு நடிகைக்கு நிகராக சம்பளம் வாங்கிய ஒரே கவர்ச்சி நடிகை இவர் தான். பின்பு இவரது வாழ்க்கையில் பணங்கள் குவிய ஆரம்பித்தது. என்னதான் தனக்கு பெயர் புகழ் தனக்கு கிடைத்தாலும் ஆணவம் இல்லாமல் இயல்பாய் வாழ்ந்தவர்.இதற்கு ஓர் உதாரணமாய் தன் வசித்து வந்த தெருவில் சிறுவர்களை பார்த்தால் அவர்களுக்கு ஸ்வீட் சாக்லெட் கொடுத்து அவர்களை பள்ளிக்கூடம் செல்லும்படி அறிவுறுத்துவாராம். அதோடு சிறுவர்கள் விளையாடும் போது ஸ்மிதாவின் வீட்டுக்குள் பந்தை அடித்து விட்டால், உடனே திரும்ப வீசப்பட்டு விடுமாம். மேலும் தான் சம்பாதித்த பணத்தை பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.

1990ம் ஆண்டு தன் காதலனுடன் சேர்ந்து படம் தயாரிக்க அது நஷ்டத்தில் கொண்டு போய் விட்டது. பின்பு பொருளாதார ரீதியாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி தன் வாழ்க்கையை தற்கொலை எனும் கோழை முடிவால் முடித்துக் கொண்டார்.இவரது தற்கொலை முடிவால் தென்னிந்தியாவே அதிர்ந்து போனது. இவரது இறப்பு இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் பொருட்டு வித்யாபாலன் நடிப்பில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் இவருக்காக தேசிய விருது கிடைத்தது.