கட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த சிறுமி(09) தனது தாயிடம் கூறியதையடுத்து அயலவர்கள் சேர்ந்து குறித்த அதிகாரியைப் பிடித்து கட்டானை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய அதிகாரியை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





