(அலுகோசு)தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியர் பதவிக்கு இருவர் விண்ணப்பம்!!

680

alukos.hangmen

தாம் மீண்டும் அலுகோசு பதவியில் பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக அந்த பதவியை முன்னர் வகித்த இரண்டு பேர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பதவிகளுக்காக இணைத்து கொண்டு பயிற்சியின் பின்னர் கடமைகளுக்கு சமூகமளிக்காததன் காரணமாக, அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக தெரிவித்து, சிறைச்சாலை திணைக்களம் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அலுகோசு பதவிக்காக அவர்கள் இணைத்து கொள்ளப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர், சுகவீன விடுமுறையில் வீடுகளுக்கு சென்ற அவர்கள் உரிய தினத்தில் சேவைக்கு சமூகமளிக்கவில்லை.

உரிய காலத்தில் சேவைக்கு சமூகமளிக்காததன் காரணமாக அவர்களை பணியில் இருந்து நீக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்தது.

பணி நீக்கம் தொடர்பான கடிதம் கிடைக்க பெற்ற ரத்தொலுவ பிரதேசத்தை சேர்ந்த சரத் புஷ்பகுமார, தாம் மீண்டும் அலுகோசு பதவியை ஏற்க விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் அலுகோசு பதவி வகித்த பியகமவைச் சேர்ந்த டீ.ஏ பத்மசிறி, மீண்டும் தாம் குறித்த பணியை பெற்று கொள்ள மேன்முறையீடு செய்த போதும், தாம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து கடிதம் அனுப்பபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இரண்டு அலுகோசு பதவிகளுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலை திணைக்களம் விண்ணப்பங்களை கோரியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார அண்மையில் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியினுள் குறித்த பதவிகளுக்கான நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வெற்றிடம் நிரப்பபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.