
அத்துருகிரிய, கப்புறுகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயதுடைய சிறுவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 11.10 மணியளவில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் கை, கால்கள் மற்றும் கழுத்து போன்ற பகுதிகள் வெவ்வேறாகும் அளவிற்கு கொடூரமான முறையில் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் யாரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிளது.
சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சிறுவனின் தந்தை வீட்டில் இருந்துள்ளதுடன் சம்பவம் இடம்பெற்றவேளை தந்தை வீட்டில் இருக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.





