உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய். எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் விஜயின் முதல் வரலாற்று திரைப்படமான புலி வெற்றியடைய வாழ்த்துக்கள், என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மோகன்ராஜா கூறியுள்ளார்.
ரீமேக் படங்களை இயக்கி வெற்றி கண்ட மோகன் ராஜா, தற்போது ரீமேக் செய்யாமல் நேரடியாக ‘தனி ஒருவன” படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டிருக்கிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஒக்டோம்பர் 1 ஆம் திகதி உலகெங்கும் கோலாகலமாக வெளியாகவுள்ளது.
விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், நந்திதா, தம்பிராமையா, ரோபோசங்கர், பிரபு என பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.





