வீதிக் காவல் தடையைத் தாண்டி பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதத்தைக் கையளித்த 5 வயதுச் சிறுமி!!

480

pop_0அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நக­ரி­லுள்ள வீதி­யொன்­றி­னு­டாக தனது விசேட வாக­னத்தில் புதன்­கி­ழமை பய­ணித்த போது, 5 வயது சிறு­மி­யொ­ருவர் ஒரு­வாறு பாது­காப்பு தடையைத் தாண்டி வந்து பாப்­ப­ர­ச­ரிடம் தனிப்­பட்ட கடி­த­மொன்றை கைய­ளித்து பாப்­ப­ர­ச­ரது மட்­டு­மல்­லாது அங்கு கூடி­யி­ருந்த அனை­வ­ரதும் கவ­னத்தையும் ஈர்த்­துள்ளார்.

கொன்ஸ்­ரி­ரி­யூஷன் வீதியின் இரு மருங்­கிலும் அமைக்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்புத் தடை­க­ளுக்கு அப்பால் பாப்­ப­ர­சரை காணும் முக­மாக கூடி­யி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களில் சோபி குரூஸ் என்ற மேற்­படி சிறு­மியும் ஒரு­வ­ராவார்.

சோபி தனது குடும்­பத்­தினர் சகிதம் அங்கு வந்­தி­ருந்தார்.

பாப்­ப­ர­சரின் வாகனம் சோபியும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் நின்ற இடத்தை நெருங்கி வரவும் அவ­ரது தந்­தை­யான ராவுல் குரூஸ் சட்­டென சோபியை தூக்கி பாது­காப்பு தடைக்கு அப்பால் இறக்கி விட்டார்.

இந்­நி­லையில் சோபி தனது கையில் கடி­தத்­துடன் பாப்­ப­ர­சரின் வாக­னத்தை நோக்கிச் செல்­லவும் அங்­கி­ருந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் அவரைத் தடுக்க முயற்­சித்­தனர்.

எனினும் வாக­னத்­தி­லி­ருந்த பாப்­ப­ரசர் சோபியை அவ­தா­னித்து அவரை தன்­னிடம் வரு­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு சமிக்ஞை செய்­துள்ளார்.

மெக்­ஸிக்­கோவின் ஒஸாகா மாநி­லத்­தி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு வந்த சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­க­ளான பெற்­றோ­ருக்கு பிறந்த சோபி, சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் என்ற வகையில் தனது பெற்றோர் நாடு கடத்­தப்­பட்டு தமது குடும்பம் பிரிய நேரிடும் என அஞ்­சு­வ­தா­கவும் அதனால் பாப்­ப­ரசர் தனது தாய் மற்றும் தந்­தைக்கும் அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஏனைய மில்­லி­யன்­க­ணக்­கான குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கும் அமெ­ரிக்­காவில் தொடர்ந்து தங்­கி­யி­ருக்க உதவ வேண்டும் எனவும் வலி­யு­றுத்தும் கடி­தத்­துடன் பாப்­ப­ரசர் வெவ்­வேறு இனங்­களைச் சேர்ந்த சிறு­வர்­களின் கரங்­களைப் பிடித்­தி­ருப்­ப­தாக காண்­பிக்கும் ஓவி­ய­மொன்­றையும் பாப்­ப­ர­ச­ரிடம் கைய­ளித்தார்.

அந்த ஓவி­யத்தில் ‘நானும் எனது நண்­பர்­களும் எமது தோலின் நிறத்தைப் பற்­றிய கவ­லை­யின்றி ஒரு­வ­ரை­யொ­ருவர் நேசிக்­கிறோம்’ என்ற வாசகம் எழு­தப்­பட்­டி­ருந்­தது.

“எனக்கு எனது பெற்­றோ­ருடன் இருப்­ப­தற்­கான உரிமை உள்­ள­தாக நம்­பு­கிறேன். எனக்கு மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தற்­கான உரிமை உள்­ளது. எனது தந்­தையைப் போல இந்­நாட்­டி­லுள்ள அனைத்துக் குடி­யேற்­ற­வா­சி­களும் இந்த நாட்­டிற்கு உண­வ­ளிக்க உதவி வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு கௌர­வத்­துடன் வாழ தகுதி உள்­ளது. அத்­துடன் குடி­யேற்ற சீர்­தி­ருத்­த­மொன்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான தகு­தியும் உள்­ளது” என சோபியால் பாப்­ப­ர­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

சிறு­மியின் துணிச்­ச­லான செயற்­பாட்­டாலும் அவ­ரது ஓவி­யத்­தாலும் மனம் நெகிழ்ந்த பாப்­ப­ரசர், சிறு­மியின் கன்­னத்தில் முத்­த­மிட்டு அவரை ஆசிர்­வ­தித்தார்.

சோபியின் பெற்றோர் சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் என்ற போதும் சோபியும் அவ­ரது சகோ­த­ரியும் அமெ­ரிக்­காவில் பிறந்­த­வர்கள் என்ற வகையில் அமெ­ரிக்­கப் பிர­ஜை­க­ளாவர். இந்­நி­லையில் சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் என்ற வகையில் பெற்­றோர் நாடு கடத்­தப்­பட்டால் சோபி யும் அவ­ரது சகோ­த­ரியும் அமெ­ரிக்­காவில் பெற்­றோரைப் பிரிந்து தனித்து வாழ நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இது தொடர்பில் சோபி கூறுகையில், அமெ ரிக்காவில் வாழும் சட்டவிரோத குடி யேற்றவாசிகளுக்கு சட்டபூர்வ அந் தஸ்தை வழங்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோர வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியிடம் என்றாவது கையளிக்க வேண்டும் என்ப தற்காக இதையொத்த கடிதத்தை ஏற்கனவே எழுதி வைத்திருப்பதாக அவர் கூறினார்.