10 வயது சிறுவன் வெட்டிக் கொலை : சந்தேகநபர் விளக்கமறியலில்!!

471

jail

அத்துருகிரிய – பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹேமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை சந்கேநபரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 50 வயதான இவர் கடுவலை – கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

பியகம பகுதியில் வைத்து நேற்றையதினம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சிறுவனின் தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆயுதத்தை காட்டுவதற்காக சந்தேகநபர் தான் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, கீழே விழுந்ததில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.