திமிங்கல வாந்தியை விற்று 16700 டொலர் சம்பாதித்த நபர்!!

637

thiminkalam

கடற்கரைக்கு தன் நாயுடன் காற்றுவாங்க சென்றவருக்கு மிகவும் விலை மதிப்புமிக்க திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.

திமிங்கலத்தின் குடலில் உருவாகும் சுரப்பி மூலம் கிடைக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள், விலையுயர்ந்த வாசனை நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த பொருளை திமிங்கலம் தனது வாய் வழியே வெளியேற்றும். இந்த பொருளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கடற்கரைக்கு தன் நாயுடன் காற்றுவங்க சென்ற இங்கிலாந்துக்காரர் ஒருவருக்கு திமிங்கிலத்தின் 50 ஆண்டுகள் பழமையான 20 செ.மீ. அளவுள்ள வாந்தி கிடைத்துள்ளது.

இதன் மதிப்பை உணர்ந்த அவர் அதை ஏலத்தில் விட்டு சுமார் 16700 டொலர் சம்பாதித்துள்ளார். மேலும் மீண்டும் திமிங்கல வாந்தி கிடைக்கலாம் என்பதால் அந்த கடற்கரை தொடர்பான தகவலை வெளியிடவில்லை.