ஐ.நா பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்- ஜனாதிபதி!!

485

maithripala_1ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் பிரே­ர­ணையில் அடங்­கிய யோச­னை­கள் சரி­யான முறையில் நடை­மு­றைப்படுத்தப்­ப­டும். அரசாங்கம் எப்போதும் மீள் நல்­லி­ணக்கம் தொடர்பான வேலைத்திட்­டத்தை முன்­னெ­டுப்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

ஐ.நா. பிர­க­ட­னங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்கும் அர­சாங்கம் தொடர்ந்தும் அனைத்து நட­வ­டிக்­கை­களையும் முன்­னெ­டுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா.பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்­வ­தற்­காக நியூயோர்க்சென்றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சனிக்­கி­ழமை ஐ.நா.தலை­மை­ய­கத்தில் செய­லாளர் நாயகம் பான் கீ மூனை சந்­தித்­த­போதே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது கருத்துத் தெரி­வித்த செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கை­யையும் வெற்றி கொண்­டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் முழு உலகமும் அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்­கையின் எதிர்­கால வெற்றிப் பய­ணத்­திற்கு சர்­வ­தே­சத்தின் பல நாடுகள் உதவ முன்­வந்­துள்­ள­தா­கவும் பான் கீ மூன் தெரி­வித்­துள்ளார்.இது தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

இச் சந்­திப்பின் போது மேலும் கருத்து தெரி­வித்­துள்ள ஐ.நா. செய­லாளர் நாயகம் இம்­முறை ஐ.நா. சபைக் கூட்­டத்தின் தொனிப்­பொருள் நிலை­யான அபி­வி­ருத்தி என்­ப­தாகும்.முழு உல­கமே இத­னைத்தான் இன்று எதிர்­பார்த்­துள்­ளது. ஐ.நா. சபை 17 கோட்­பா­டு­களை முதன்­மைப்­ப­டுத்தி அதனை நிறை­வேற்­று­வதை இலக்­காகக் கொண்­டுள்­ளது.இத் திட்­டத்தை இலங்­கையில் வெற்­றி­க­ர­மாக்க பங்­க­ளிப்பை வழங்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அத்­தோடு கடந்த ஜனா­தி­பதித் தேர்தல், மற்றும் பொதுத் தேர்­தலை சுமு­க­மாக அமை­தி­யாக நடத்­து­வ­தற்கு பங்­க­ளிப்புச் செய்த ஜனா­தி­ப­திக்கு இதன்­போது தனது நன்­றி­க­ளையும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை தேர்­தல்­களை சுமு­க­மாக நடத்­து­வ­தற்கு ஆத­ரவு வழங்­கிய ஐ.நா. செய­லாளர் நாய­கத்­திற்கு ஜனா­தி­பதி இதன்­போது தனது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொண்­டுள்ளார்.

இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பாகத் தனது வர­வேற்பை வெளி­யிட்ட செய­லாளர் நாயகம் திட்­ட­மி­டப்­பட்ட அர­சியல் வேலைத்­திட்டம் ஊடாக இதனை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க முடியும் என்றும் அதற்குப் பூரண ஆத­ரவை வழங்கத் தயா­ராக இருப்­ப­தாகவும் தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது கருத்துத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,ஐ.நா. பிர­க­ட­னங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்கும் அரசாங்கம் என்ற வகையில் எதிர்­கா­லத்­திலும் ஐ.நா. அமைப்­புடன் நம்­பிக்­கை­யோடு இணைந்து செயற்­படத் தயா­ராக உள்­ள­தா­க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் ஊடாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் இலங்கை நல்லாட்சிக்கான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜெனீவா யோசனைகள் தொடர்பாக சரியான வழியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அனைத்து தருணங்களிலும் மீளிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.