எரிவாயு நிலையத்தில் சிலந்தியை சுட்டுப்பொசுக்க முயன்றதால் விபரீதம்!!

582

fire_28எரிவாயு நிலையமொன்றில் எரிவாயுவை நிரப்புவதற்கு தனது காரை நிறுத்திய நபரொருவர், தனது எரிவாயு கொள்கலத்திலிருந்த சிலந்தியொன்றை சிகரெட்டைப் பற்ற வைக்கும் உபகரணத்தால் எரித்துக் கொல்ல முயற்சித்ததால் காரும் எரிவாயு பம்பி உபகரணமொன்றும் தீக்கிரையான சம்பவம் அமெரிக்க மிக்சிக்கன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

பெயர் வெளியிடப்படாத குறிப்பிட்ட நபர் வெற்று எரிவாயு கொள்கலத்தின் மேற்பரப்பில் சிலந்தியைக் கண்டதும் அச்சம் காரணமாக அதனைச் சுட்டுப் பொசுக்கி கொல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் அந்தக் கொள்கலத்தில் தீ ஏற்பட்டு பரவி காரின் பின் பகுதியும் எரிவாயு விநியோக பம்பி உபகரணமும் தீப்பற்றி எரிந்துள்ளன.
இந்நிலையில் விரைந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.இந்த சம்பவத்தில் அந்நபர் சிறியளவான எரிகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.