ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த முன்னாள் தடகள வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் தடகள வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க கடந்த 2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று 15 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தடகள வீர வீராங்கனைகளுக்கான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்கக் கூடிய பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிக்கவுள்ளார்.
தடகள வீர வீராங்கனைகளுக்கு பயிற்சிகளையும், கற்றல் நடவடிக்கைகளையும் இலவசமாகப் பெற்றுக்கொடுப்பதே தனது பிரதான இலக்கு என சுசந்திகா ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி பயிற்சி நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக சுசந்திக்கா ஜயசிங்கவின் முன்னாள் முகாமையாளராகவும், பயிற்றுநராகவும் செயற்பட்ட அமெரிக்க நாட்டவரான டோனி கெம்பல் கலந்துகொள்ளவுள்ளார். மேலும், இந்நிகழ்வுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்னணி பயிற்றுநர்





