105 வயதில் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை புரிந்த தாத்தா!

370

sprinter-500x500ஜப்பானை சேர்ந்தவர் டோகிசி மியாசாகி. 105 வயதான இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகிலேயே அதிவேக ஓட்டக்காரர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ஓட்டப்பந்தயத்தில் 105 வயதுடையவர்களுக்கான ஒரு பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இந்த கிரேட் தாத்தாவையே சேரும். 105 வயதில் இவர் இவ்வாறு அதிவேகமாக ஓடுவது மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவர் தனது வேகத்தில் திருப்தி இல்லை என்று கருதுகிறாராம்.

இதில் மற்றொரு வியப்பு என்னவென்றால், உலகப்புகழ் பெற்ற அதிவேக ஓட்டக்காரர் உசேன் போலட்டுடன் போட்டியிடுவதுதான் அவரது லட்சியமாம்.