அதிக உயிர்களை பலி வாங்கிய செல்பி!!

332

selfie-500x500

உலக அளவில் சுறா மீன்களை விட அதிகமானோரை செல்பி கொன்றுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு நல்ல செல்பி படம் எடுத்து அதை, உலகத்துக்கு காண்பிக்கும் ஆசையில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, தாஜ்மஹால் படிக்கட்டில் விழுந்து, மின்சாரம் பாய்ந்து, பாலங்கள் மீது நின்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு என விதவிதமாக வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த முயற்சிகளில் அடிபட்டவர்கள் மட்டும் நூறுக்கும் மேல்.

ஆனால், சுறா மீன் தாக்கி உயிரிழந்தவர்கள், 6 பேர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய நாட்டில் செல்பி மோகத்தால் உயிரை இழக்கும் தமது மக்களின் உயிரை காக்கும் முயற்சியில் சுவரொட்டி விளம்பரங்கள் தயார் செய்து வெளியிட்டனர்.

செல்பியை மிஞ்சி மிஞ்சிப் போனால் எத்தனை பேர் ரசிக்கப்போகிறார்கள்! நீங்கள் வாழ்ந்து, செல்பி லைக்கைக்காட்டிலும் பெரிதாக என்னென்னவோ சாதிக்கமுடியும் என்பதையும் கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு போட்டோவுக்காக உங்களது உயிரை விடாதீர்கள்! நீங்கள் இல்லாத உலகில் செல்பி இருந்து என்ன பயன்?