இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் 4 மில்லியன் இழப்பு!!

524

fisherman_0

இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி நட­வ­டிக்­கையால் யாழ். மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 4 மில்­லியன் ரூபா வரை இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்­கள தக­வல்­களில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வட­ப­கு­தியில் குறிப்­பாக யாழ்.மாவட்ட கடல் பரப்பில் இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய தொழில் முறையால் 2013 ஆம் ஆண்டு 6.4165 மில்­லியன், 2014ஆம் ஆண்டு 17.2 மில்­லியன், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 4 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்த இழப்­புக்கள் பாதிக்­கப்­பட்ட கடற்-­றொழி­லா­ளர்­க­ளினால் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் அலு­வ­ல­கத்தில் பதிவு செய்­யப்­பட்ட பதிவின் பிர­காரம் இது பெறப்­பட்­டுள்­ளது. சில தொழி­லா­ளர்கள் தமக்கு ஏற்­பட்ட இழப்­புக்கள் தொடர்பில் விப­ரங்கள் பதி­வு­செய்­யாதும் உள்­ளனர்.

இதே­வேளை இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் தொடர்பில் 2013ஆம் ஆண்டு 48 பட­கு­களும் 220 மீன­வர்­களும் 2014 ஆம் ஆண்டு 99 படகுகளும் 427 மீனவர்களும் 2015ஆம் ஆண்டு ஆவணி வரை 21 படகுகளும் 143 மீனவர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.