விண்ணில் அனுப்பப்பட்டது பிஎஸ்எல்வி சி30 !!

884

PSLV-C-30-take-view-rsfSET-IMAGE-696x4657 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி30 விண்கலம் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி30 விண்கலம் மூலம் இந்த செயற்கைகோள்கள் இன்று காலை 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்னில் செலுத்தப்பட்ட 22 வது நிமிடத்தில் இந்த செயற்கைக் கோள்கள் புவியின் சுற்றுவட்டப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தில் விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள ’ஆஸ்ட்ரோசாட், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைகோள்கள், இந்தோனேசியா, கனடா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள் என மொத்தம் 7 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி30 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியா சார்பில் அண்டவெளியில் நிலைநிறுத்தப்படும் ஆஸ்ச்ரோசாட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். சூரிய சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ளவும், எக்ஸ்-ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும் இந்த செயற்கைகோள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.