அதிநவீன வசதிகளுடன் Google Nexus 5x இன்று வெளியாகிறது!!

461

1443436978-0514-300x226

மொபைல் பிரியார்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக கூகுள் நெக்சஸ் 5x ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நாளை கூகுள் நிறுவனம் வெளியிடுகிறது. இதுகுறித்து அறிவிப்பை கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலும், வலைதளத்திலும் வெளியிட்ட கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டு மெமரி ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு wife வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள கூகுள் நெக்சஸ் 5x ஸ்மார்ட் போனில் 5.2 அங்குல திரை அகலம் (full HD IPS display), Quad-core 1.44 GHz Cortex-A53 & dual-core 1.82 GHz Cortex-A57 Qualcomm Snapdragon 808 Processor, 2ஜிபி ரேம், சிறப்பான வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கப் பயன்படும் 12 மெகா பிக்சல் கேமரா, வீடியோ சாட்டிங் மற்றும் முகம் பார்த்துப் பேசப் பயன்படும் வீடியோ அழைப்பை மேற்கொள்ளவும் 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 24 மணி நேரம் தொடர்ந்து பேசுமளவிற்கு மின்சக்தியை வழங்கும் திறன், மற்றும் 500 மணி நேரம் மின்சக்தியை தேக்கி வைக்கும் திறன் கொண்ட 2700mAh பேட்டரியை கொண்டுள்ளது.