Massages block முறை Gmail லும் அறிமுகம்!!

314

gmail

தேவையில்லாமல், வந்து குவியும் மெயில்களில் இருந்து விடுதலை பெறும் வகையில், Gmail block மற்றும் ‘Unsubscribe’ ஆகிய பொத்தான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

கணிப்பொறிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதி, ஒரு வாரத்தில் கைப்பேசி அன்டடரொய்ட் தளத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.

சில சமயங்களில் உங்களுக்கு விரும்பத்தகாத மெயில்கள் அடிக்கடி வரும் போது இந்த பயனரிடம் இருந்து எனக்கு செய்திகள் வரவேண்டாம்’ என்று உங்களால் தைரியமாகச் சொல்லமுடியும்.அதாவது உங்களால் அத்தகைய நபர்களை block செய்யமுடியும். இந்த வசதி இன்றிலிருந்து கணினிகளிலும், ஒரு வாரத்துக்குள் அன்ட்ரொய்ட் தளத்திலும் அறிமுகமாகும்.
block செய்யப்பட்ட மெயில்கள் யாவும், ‘spam’ எனப்படும் தேவையில்லாத ஃபோல்டரில் இருக்கும்.

பயனாளிகள் மனம் மாறி, அந்த மெயிலைப் பார்க்க வேண்டும் என்றால் திரும்பவும் unblock செய்துகொள்ளலாம்.இந்த வசதியோடு, ‘Unsubscribe’ வசதியும் அன்ட்ரொய்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத செய்திகளை நேரடியாக ஜி-மெயிலில் இருந்தே Unsubscribe செய்துவிடலாம்.முன்னாள் நீங்கள் subscribe செய்திருந்த செய்திகளையும் இனிமேல் நீங்கள் படிக்கத் தேவையிருக்காது.கடந்த ஜூன் மாதம், கூகுள் நிறுவனம், அனுப்பப்பட்ட மெயிலை, 30 விநாடிகளுக்குள்ளாகத் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.