சில நொடிகளில் மரம் ஏறும் 97 வயது பாட்டி!!

350

tree-500x500சத்தான உணவு நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் என நமது பெற்றோர் அவ்வப்போது நமது சோம்பேறித்தனத்தை சுட்டிக்காட்டும்போது கூறுவர். கிட்டத்தட்ட அதை உண்மையாக்கும் விதமாக ஒரு சீனப் பாட்டியின் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

‘எனது சொந்த ஊரில் மரமேறி நானே பழங்களைப் பறித்துப் போடுவேன்’ எனக் கூறும் அந்த மூதாட்டி, தற்போது தனது 97 வயதிலும் சரசரவென கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்தில் ஏறி இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நமது வேகம் எல்லாம் கம்யூட்டருக்குள் இருக்கும் கேம்களை பரபரப்பாக விளையாடுவதில்தான். சிறு வயதில் ஒருமுறையாவது மரமேறி கிழே விழுந்தால்தான் அதன் சிறப்பான, இனிமையான அனுபவம் பற்றி பின்னாளில் ஊருக்கு உபதேசம் செய்ய முடியும். வயதான பின்னர் கதை சொல்லவாவது ஏதாவது செய்திருக்க வேண்டுமல்லவா?