பாரிய கடலரிப்பினால் பலகோடி அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து அழிவு!!

1336

Katalarippuகாத்தான்குடி பிரதேசத்தில் பாரியளவில் அதிகரித்துள்ள கடலரிப்பினால் கடற்கரையோரங்களில பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து வருகின்றன.

காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரம் கடலரிப்பு பாரியளவில் உள்ளதால் கடற்கரையோரம் கடற்றொழில் அமைச்சினால் 2 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றாக அழிவடையும் நிலையை எதிர் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதி கடரரிப்பினால் இடிந்து விழுந்துள்ளன.

கடலிருந்து 40 அடிகள் அலைகள் வெளியே வந்து கட்டிடங்களை அழித்து வருகின்றன.இதனால் பல்லாயிரம் மக்களின் ஜீவனோபாயமும் இக்கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே குறித்த கடலரிப்பை தடுக்க கடற்றொழில் திணைனக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.